நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!
இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும்
(கந்தம் = ஹ்ருதயம்..? ). நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.
இதில் மேலே போகக்கூடிய நாடிகள் “ஆக்நேய“ நாடிகளாகும்.
கீழே போகக்கூடிய நாடிகள் “ சௌம்ய“ நாடிகளாகும்.
குறுக்கே போகக்கூடிய நாடிகள் “சௌம்யாக்நேய“ நாடிகளாகும்.
இந்த 14000 நாடிகளில் மிக முக்யமானவை 10 நாடிகளாகும்.
அவைகள்
(1) இடா (2) பிங்களா (3) மேலே செல்லக்கூடிய “சுழும்னா“
(4) காந்தாரி (5) ஹஸ்திஜிஹ்வா (6) பூஷா (7) யஸஸ்வினி
(8) அலம்புஸா (9) குஹூ (10) கோசினி.
இந்த நாடிகள் நமது தேஹத்தில் எங்கெங்கு உள்ளன..?
“சுழும்னா” என்கிற மத்ய நாடி கந்தபாகத்திலிருந்து மேல்நோக்கிச்
செல்கின்றது.
இந்த “சுழும்னா“ நாடியின் இடது புறம் “இடா“ என்கிற நாடியும்
வலது புறம் “பிங்களா“ என்ற நாடியும் நமது மூக்குவரை வியாபித்துள்ளது.
இந்த “சுழும்னா“ நாடிக்கு முன்புறம் “காந்தாரி” என்கிற நாடி நமது இடது கண் வரையிலும் ”ஹஸ்திஜிஹ்வா” என்னும் நாடி வலது கண் வரையிலும் வியாபித்துள்ளது. கந்த பாகத்திலிருந்து மேல் நோக்கிய வண்ணம்
இரு காதுகள் வரை ’பூஷா“ மற்றும் “யஸஸ்வினி” ஆகிய இரு நாடிகளும் உள்ளன. கந்தபாகத்திலிருந்து, பாதம் வரை உள்ளது “அலம்புஸா“ என்கிற நாடி. இரகஸ்ய பிரதேசம் வரை உள்ளது “குஹூ“ நாடி.
கால் கட்டைவிரலில் “கோசினி“ என்னும் நாடி உள்ளது.
இந்த நாடிகளின் நிறங்கள்…
இடா – வெள்ளை
பிங்களா – சிகப்பு
காந்தாரி – மஞ்சள்
ஹஸ்திஜிஹ்வா – கருப்பு
பூஷா – கருமஞ்சள்
யஸஸ்வினி – பச்சை
அலம்புஸா – சிகப்பரக்கு (Redish Brown)
குஹூ – இளஞ் சிகப்பு
கோசினி – கருப்பு
இவைகள் பிரதானமாக விளங்கும் 10 நாடிகளாம்.
இந்த 10 நாடிகளிலும் விளங்கும் 10 வாயுக்கள்.
இடா – பிராணன்
பிங்களா – அபானன்
அலம்புஸா – சமானன்
குஹூ – வ்யானன்
சுழும்னா – உதானன்
பிங்களா – நாகன்
பூஷா – கூர்மன்
யஸஸ்வினி – க்ருகரன்
ஹஸ்திஜிஹ்வா – தேவதத்தன்
கோசினி – தனஜ்ஜயன்
இந்த வாயுக்களின் நிறம்
பிராணன், நாகன் – பவள நிறம்
கூர்மன், அபானன் – இந்திர கோபன்
சமானன், க்ருகரன் – ஆகாய நிறம்
தேவதத்தன், உதானன் – தாமரை மகரந்த நிறம்
தனஜ்ஜயன், வ்யானன் – கடல்நுரை போன்ற நிறம்.
இவ்வளவு விவரங்களையும் தெளிவாகச் சொல்லிவிட்டு “ப்ராணயாம“த்தினைப் பற்றி விளக்குகின்றார் சாண்டில்ய மஹரிஷி.
========================
(மெய்ஞானம் கொண்டு அறிந்த இந்த நாடி அறிவிற்கு ஏதும் சமமாகுமா..?
நம் மஹரிஷிகள் காட்டிச் சென்ற பாதையினை நாம் மறந்து மேலைநாட்டு விஞ்ஞானத்தில் ஆழ்ந்து இன்று பல குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளோம்.
நாடி பார்த்து நோய் தீர்க்கும் மிகச் சிறந்த வழிமுறை மறந்து போனோம்..! )