Srirangapankajam

March 26, 2009

Pesum Arangam-55

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:24 pm

ரகுபதிபதஸங்காத் ராஜ்யகேதம் தயஜந்தீ
புநரபி பவதீ ஸ்வாந் தர்சயந்தீ விஹாராந் !
அபிஸமதித வ்ருத்திம் ஹர்ஷகோலாஹலாநாம்
ஜநபத ஜநிதாநாம் ஜ்யாயஸா சிஞ்ஜிதேந !!883!!

ரகுபதி : ஸ்ரீராமனுடைய – பத : திருவடிகளில் – ஸங்காத் : சேர்ந்த்தால்
ராஜ்யகேதம் : ராஜ்ய பாரத்தினால் உண்டான கஷ்டத்தை – தயஜந்தீ : விட்டவாளாயும். – ஹர்ஷ : ஸந்தோஷமான – கோலாஹலாநாம் : கூச்சல், கொண்டாட்டம்.

பாதுகையானது பதினான்கு வருடங்கள் பொறுமையாக ஓரிடத்தில் நிலைத்து நின்று தூயஅரசாட்சி நடத்தியது. இந்த ராஜ்ய பாரத்தினை சுமப்பது என்பது இலகுவான காரியமில்லை! மிக மிக கடுமையான ஒரு சுமை! இராமன் வனவாசத்திலிருந்து அயோத்திக்குத் திரும்புகின்றான். இராமன் வந்து பாதுகைகளை அணிந்தவுடனே பாதுகை, இத்தனை நாள் ராஜ்யபாரத்தினால் உண்டான கஷ்டங்களை அறவே மறந்து, தனக்கு சொந்தமாயுள்ள பெருமாள் திருவடிகளோடு மகிழ்வுடனே சேர்ந்துபெருமாள் திரும்பிவந்து விட்டதாலுண்டான சந்தோஷத்தில் கூச்சலிட்டதாம்.

பெருமாள் கிருஷ்ணனாய் அவதரிக்கின்றார். துஷ்ட நிக்ரஹம், சிஷ்ட பரிபாலனம், தர்மத்தினை நிலைநாட்டுகின்றார். பின்னால் வரப்போகும் சந்ததியினர்காக ‘கீதை” என்னும் ஒரு பெரிய பொக்கிஷத்தினை அளித்து பக்தி, பிரபத்திகள் எனும் மோக்ஷ உபாயங்களை அறிவிக்கின்றார். இராமனைப் போலன்றி அதி சீக்கிரமாக தன்னடி சோதிக்கு எழுந்தருளுகின்றார். கலி பிறக்கின்றது. நல்வழி காட்டுபவர்கள் யாரும் இல்லையெனில் இந்த கலி இன்னும் கடுமையாகுமே! லோகத்தார்களை ரக்ஷிக்க வேண்டுமே..? தன் திருவடியாழ்வாராகிய பாதுகையினை நம்மாழ்வாராய் இந்த கலியில் அவதரிக்கச் செய்தான்.
பெருமாளுடைய பிரிவினைப் பொறுத்துகொண்டு பாதுகையாய் அப்போது அரசாண்ட அந்த பாதுகை இப்போது நம்மாழ்வாராய் அவரைப் பிரிந்து அவதரிக்கின்றது. கலியில் பெருமாளை இழந்து உண்மைப் பொருளை அறியாமல் உலகம் கெட்டு போயிருப்பதையும், இந்த கலியில் பக்தி மார்க்கத்தினை அனுஷ்டிப்பது கடினம் என்பதனையும் உணர்ந்து – சுலபமானதும், சீக்கிரத்தில் பலனைத் தருவதானதும், எல்லோரும் அனுஷ்டிக்க்க் கூடியதும், எல்லா மார்க்கத்தினைக் காட்டிலும் உயர்ந்த்தானுமான “சரணாகதி“ ஒன்றுதான் மோக்ஷத்திற்கு உபாயம் என்றும், இந்த உபாயத்தினால் பெருமாளை அடைவதே சிறந்த்து என்றும், ஸ்ரீயப்பதியான ஸ்ரீமந் நாராயணனே பரத்வம் – இந்த உலகு அவரது உடம்பு – அவருடைய விளையாட்டுதான் இந்த உலகத்தினை சிருஷ்டித்தல். காத்தல், அழித்தல் – மோக்ஷம் என்பதனை அவர் ஒருவரைத் தவிர மற்ற எவராலும் அளிக்க இயலாது – அவரை எல்லோரும் ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கள் என்று உண்மையை, வேதமனைத்தையும் தமிழில் பாசுரமாக உலகுக்கு உணர்த்தி, எல்லோரையும் வைணரவாக்கி உலகினை ரக்ஷணம் செய்தார்.
பெருமாளுடைய பிரிவாற்றாமை ஆழ்வாரை மிகவே பாதித்த்து. அர்ச்சை ரூபத்திலாவது இப்பூவுலகில் தனக்கு ஸேவை சாதிக்கவேணும் என்று வேண்டி நிற்க, ஆர்த்தியோடு அனைவரையும் அழைக்க, அனைத்து திவ்யதேச பெருமாள்களும் ஆழ்வார் இருக்குமிடம் வந்து தரிசனம் கொடுக்க.
ஆழ்வார், பெருமாளின் பிரிவினால் உண்டான கஷ்டம் மறந்து, சந்தோஷம் மிகுந்து, அந்த அனுபவங்களைனைத்தையும் பாசுரங்களாய் பாடி சந்தோஷ கூச்சலிட்டு மெய்மறந்திருந்தார். ஆழ்வாருடைய உபதேசங்களினால் ஜனங்களும் அர்ச்சாவதாரத்தின் உண்மைகளையும் பெருமைகளையும் அறிந்து, பல்லாண்டு பாடி ஆடி ஆனந்தித்துயிருந்தனர்.

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: