Srirangapankajam

March 8, 2009

Pesum Arangam-46

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 6:37 pm

Chapter-46
07.03.2009
 


மிகவும் உன்னதமான பாதுகையினை பிரம்மன் முதலானவர்களும், சமஸ்த தேவதைகளும் தம் சிரம் தாழ்த்தி வீழ்ந்து வணங்குகின்றனர்.  அப்போது அவர்கள் அணிந்துள்ள விலைமதிப்பற்ற க்ரீடங்கள் அந்த பாதுகையின் மேல் உராய்ந்து உராய்ந்து ரேகைப் போன்ற அடையாளங்கள் ஏற்படுகின்றன.  அவைகளைப் பார்த்தால் வேதங்களனைத்தையும் சுருக்கி
சூக்கும எழுத்துக்களாய் மாற்றி வைத்துள்ளது போலுள்ளது.

பெருமாளின் திருவடிகள் பாதுகையினை விட்டு அகலாதுயிருப்பதால் நம்பெருமாளின் உள்ளங்கால்களில் உள்ள ரேகைகள் பாதுகைகளின் மேல் அச்சாய் படிந்துள்ளது.  சாஸ்திரங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் உள்ள சில ரேகை அமைப்பினை வைத்து மஹாராஜன் ஆவான் என்கிறது.  எல்லா தெய்வங்களுக்கு ராஜாவான ரெங்கராஜனின் உள்ளங்கால் ரேகை அமைப்பினைத் தாமும் பெற்ற,
திவ்யமய பாதுகைகள,  நம்பெருமாள் திருவடியகலாத நாச்சியாராய் இருந்து பரிமளப்பதால், பாதுகைதாம் சமஸ்த லோகத்திற்கும் பட்ட மகிஷி!
 
த்ரிதா மகுடரத்நோல்லேசுரேகாபதேசாத்
பரிணமயஸி பும்ஸாம் பாதுகே! மூர்த்தி லக்நா !
நரகமதந ஸேவாஸம்பதம் ஸாதயித்ரி
நியதிலிகிதாநாம் நிஷ்க்ருதிம் துர்லிபீநாம் !!815!!
 
லிகிதாநாம்: எழுதப்பட்டிருக்கின்ற – துர்லிபீநாம்: கெட்ட எழுத்துக்களை – நிஷ்க்ருதீம்: அழிக்கின்றது.
 
எல்லாக் கடவுளாலும் வணங்கப்பெறுகின்ற, அவர்களது க்ரீடம் தீண்டப்பெறுவதால், அந்த கீறல்களை ரேகைகளாய் பெற்ற மிக உன்னதமான அந்த பாதுகைகள், தம்முடைய சக்தியினால், தாம் தீண்டும் (ஸ்ரீசடாரி பெறுகின்ற) ஜீவர்களின் தலையில் எழுதப்பட்டுள்ள கெட்ட எழுத்துக்களை, இந்த ஜீவன் தம்முடைய ஜீவித காலத்தில் இன்னின்ன கஷ்டங்கள் பட்டேயாக வேண்டும் என்று எழுதப்பெற்றுள்ள, கெட்ட எழுத்துக்களை, மோக்ஷத்திற்கு இடைஞ்சலாயுள்ள ரேகைகளை, தம்முடைய தீண்டுதலினால் அழித்து நல்ல எழுத்துக்களாய், அந்த ஜீவன் மோக்ஷமடையவல்ல நல்ல ரேகைகளாய் மாற்றுகின்றது.
 

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: