Srirangapankajam

March 7, 2009

Pesum Arangam-45

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 10:07 am

Chapter-45
04.03.2009
 


பாதுகையில் உள்ள குமிழ்கள் நம்பெருமாளின் திருவடிகளுக்கு ஒரு திருவாபரணம் போன்று சிறந்த ஆபரணமாய் விளங்குகின்றது.  பாதுகை
நம்பெருமாளின் உள்ளங்காலுக்கும் பாதுகையின் குமிழ்கள் திருவடிகளின் மேல் புறத்திற்கும் ஆபரணமாக திகழ்கின்றது.
 
நல்ல ஆச்சார்யன் இந்த பூமிக்கு ஸந்தோஷத்தினை உண்டு பண்ணுகின்றார்கள்.  இந்த பூமிக்கு அலங்காரமாகவும் விளங்குகின்றனர்.
 
இந்த பாதுகையானது நம்பெருமாளின் திருவடிக்குச் சிறிதும் சிரமேற்படாமல் பாதுகாக்கின்றது.  உள்ளங்காலில் வெப்பம், முட்கள் முதலியன தாக்காமல் காக்கின்றது. புறங்காலில் வெய்யில் படாமல் கடை போல விரிந்து காக்கின்றது.  பாதுகையின் குமிழ் புறங்காலுக்குக் குடை போலுள்ளது.
 
ஆழ்வார் ஆச்சார்யர்கள் பெருமாளின் திருவுள்ளத்திற்கு ஓப்பான காரியங்களைச் செய்கின்றார்கள்.   ஒரு கெடுதியும் இல்லாமல் காப்பாற்றவும் செய்கிறார்கள்.
 
பாதுகாயினுடைய விரலுக்கு பிடிப்பாய் இருக்கும் குமிழானது உயரே தூக்கியபடி நிற்கின்றது.  அதனை ஸேவிக்கும் போது அந்த பாதுகையானது ”ஸ்ரீமந் நாராயணன்தான் உயர்ந்த தெய்வம்” என்று தம் ஆள்காட்டி விரலைச் சுட்டிக்காட்டி ஸாதித்தருளுவது போலுள்ளது.

ஆழ்வார் ஆச்சார்யர்கள்தானே பரத்துவத்தை ‘நாராயணனே பரதெய்வம்’ என்பதை நிலைநாட்டியவர்கள்! 
 
ஸ்வததே மணிபாதுகே! த்வதீயா
பதசாகாயுக யந்த்ரிகா விசித்ரா !
பரமம் புருஷம் ப்ரகாசயந்தீ
ப்ரணவஸ்யேவ பரேயமர்த்த மாத்ரா !! 804 !!
 
பதசாகாயுக: இரண்டு திருவடிகளிலுமுள்ள கட்டைவிரல்களுக்கு பிடிப்பாயுள்ள – யந்த்ரிகா: குமிழ்கள் – பரா: கடைசியிலுள்ள –
அர்த்தமாத்ரா – மகாரம் என்கின்ற அரை மாத்திரையுள்ள எழுத்துப்போல –  ஸ்வததே: இன்பமாயுள்ளது.
 
பாதுகையில் குமிழ்தான் பிரதானம்.  இந்த குமிழ் இல்லாவிடின் பிடிப்பு ஏது? அதுபோன்று பிரணவத்திலும் ‘ம’காரம் என்கின்ற எழுத்து பிரதானம்.  இந்த ‘ம’காரமானது ஜீவ ஸ்வரூபம்.  இந்த ஜீவன் பெருமாளுடைய மனுஷ்யன்!  இந்த ஜீவனுக்குப் பெருமாளின் திருவடிகளில் பிடிப்பு ஏற்பட செய்வது, பெருமாளைப் பற்றிய அறிவை மேம்படுத்தி பிடிப்பு ஏற்படுத்தி உஜ்ஜீவிக்கச் செய்வது – பெருமாளுக்கு பிரதானமாயுள்ள ஆச்சார்யன் மட்டுமே!.
 

Blog at WordPress.com.

%d bloggers like this: