Srirangapankajam

February 21, 2009

Pesum Arangam-38

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 10:51 am

Chapter-38
20.02.2009

ஸ்ரீரங்கநாதனுக்கு மாலையிட்டது போல் அரங்கமாநகரை தீவு ஆக்கி குதூகலிக்கும் காவிரித் தாய்க்கு பொன்னி என்ற ஒரு பெயரும் உண்டு. இந்த பெயர் பாதுகையினால் ஏற்பட்டது என்று நயம்பட
உரைக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

லேபே ததாப்ரப்ருதி நுர்நமியம் பவத்யா:
காந்த்யா கவேரதநயா கநகாபகாத்வம் !
யாவந் முகுந்தபதஹேம பதாவநி ! த்வம்
புண்யம் விபூஷிதவதீ புளிநம் ததீயம் !! 739 !!

கவேரதநயா: கவேரன் என்கின்ற ராஜாவின் குமாரத்தியான காவிரியே!
கநகாபகாத்வம்: தங்க ஆறாக பளபளக்கின்றாய்!

ஹே பாதுகே! உன்னுடைய தங்க காந்தி, கவேரன் என்கின்ற ராஜாவின் மகளான காவிரி ஆற்றின் மேல் பட்டவுடன் அது தங்க ஆறாக, அதாவது, பொன்னியாக மாறியது.

இங்கு ‘பொன்னிசூழ் திருவரங்கத்தினை’ – நாம் காவிரிக்கு ஒப்பாக எடுத்துக்கொள்வோம்.
நம்மாழ்வாரும், திருவாய்மொழியும் – ‘பாதுகை மற்றும் பாதுகையின் காந்தி’.

பெருமாள் என்றால் பெரும் (பெரிய) ஆள் (புருஷன்). அவனைத் தவிர மற்றவர்களெல்லாம் பெண்தான். இந்த பெருமாள் பெரியபெருமாளானது, பெருமாளான சாக்ஷாத் ஸ்ரீராமபிரானே ஆராதித்தப்படியினால், பெருமாளே இந்த பெருமாளை ஆராதித்தப்படியினால் பெரியபெருமாள். நம் எல்லாரையும் கரைசேர்க்க திருவரங்கத்தில் காவிரிக்கரையில் காத்திருக்கின்றபடியினால், நம்பெருமாள். அப்படியிருந்தாலும் ஸ்ரீநம்மாழ்வாரால் பாடப்பட்டபடியால்தான், நம்மாழ்வாரே பாதுகையாய் அமர்ந்தபடியால்தான் இவருக்கு இவ்வளவு பெருமையும்!

கநகருசிரா காவ்யாக்யாதா சநைச் சரணோசிதா
ச்ரிதகுருபுதா பாஸ்வத்ரூபா த்விஜாதிபஸேவிதா !
விஹிதவிபவா நித்யம் விஷ்ணோ: பதே மணிபாதுகே
த்வமஸி மஹதீ விஸ்வேஷாம் ந: சுபா க்ரஹமண்டலீ !!749!!

ஹே! பாதுகே! உன்னிடத்தில் மஹா காவ்யங்களான இராமயணம், பாரதம் முதலான காவ்யங்கள் உன்னைப் போற்றுகின்றது!. பெருமாள் மகிழ்வோடு சஞ்சரிப்பதற்கு நீ உதவியாய் உள்ளாய்! சூரியனைக்கு மேல் தேஜஸ்ஸோடுயிருக்கின்றாய்! உண்மையான ஆச்சார்யர்கள், வித்வான்கள் பலரும் உன்னை ஸ்தோத்திரம் பண்ணுகின்றார்கள்! உன்னாலே பெருமாளுடைய திருவடிக்கு விசேஷ ஏற்றம் உண்டாகின்றது!. நீ எல்லாவித உபத்ரவங்களையும், நவக்ரஹங்களினால் ஏற்படும் தோஷங்களையும், போக்கி எல்லா சௌக்யங்களையும் அருளுகின்றாய்!

ப்ரஜ்வலித பஞ்சஹேதி: ஹிரண்மயீம் த்வாம் ஹிரண்ய விலயார்ஹ:
ஆவஹது ஜாதவேதா: ச்ரியமிவ ந: பாதுகே! நித்யம்!

ப்ரஜ்வலித: பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற
பஞ்சஹேதி: ஐந்து ஜ்வாலை
ஜாதவேதா: – பகவானானவர் – நித்யம்: எப்போதும் ஆவஹது: கொடுக்கவேணும்.

எப்போதும் அக்னி போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தங்கமயமான பாதுகையே! தங்கமாயிருக்கின்ற உன்னை
எங்களுக்கு எப்போதும் கொடுக்க வேணும்!

சாஸ்திரங்கள் அக்னியை த்யானித்தால் ஸம்பத் உண்டாகும் என்கிறது.

உன்னைத் தியானிக்கும் எங்களுக்கு நல்லதொரு ஆச்சார்யனை அருளுவாயாக!

இங்கு ஒரு மாறுபட்ட பிரார்த்தனையை வைக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

இங்கு ஆச்சார்யனிடத்தில் பெருமாளைக் கேட்கவில்லை. பெருமாளிடத்தில் ஆச்சார்யனைக் கேட்கின்றார்.

இம்மாதிரியான மாறுபாடெல்லாம் நம்பெருமாள் பக்கலிலேதான் காணலாம். அதனைச் செவ்வனே செய்யவும் செய்வான் அரங்கன்.

திருப்பாணாழ்வார் காவிரியின் அக்கரையில் நின்று அரங்கனை நினைந்து உருகுகின்றார். அவரது எண்ணம் புவியிற் சிறந்த பொன்னரங்கத்தில் தம் திருவடிகள் படக்கூடாது – அரங்கத்துள் வர தனக்கு யோக்யதையில்லை என்பதுதான். வலுக்கட்டாயமாக நம்பெருமாளே அவரைத் திருவரங்கத்தன்னுள் நடக்க வைத்திருந்தால், எண்ணம் முழுதும் எப்போதும் அரங்கத்துள் தம் காலடிபடக்கூடாது என்று எண்ணியிருந்த அவர்தம் கால் கண்டிப்பாக கூசியிருக்கும். முழுதும் மனம் ஓப்பி அரங்கனைத் தரிசித்திருக்க மாட்டார். சில லீலைகள் புரிந்தான். லோக சாரங்கர், ஆழ்வாரிடத்து நம்பெருமாள் ஆணை என்றவுடன் ஏற்றார். நம் வைணவ சம்ப்ரதாயத்தில் பெரியவர்கள் எது செய்தாலும் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஏற்க வேண்டும்! அது நமக்கேச் செய்யும் கைங்கர்யம் ஆனாலும் சரி! இதனால் ஒப்புக்கொண்டார்.

லோகசாரங்கமுனி அவரை தம் தோள் மீது சுமந்து வந்தார். இதனை திருப்பாணாழ்வார் தமது பாசுரத்தில் முதல் வரியிலேயே “அடியார்க்கென்னையாட்படுத்த விமலன்“ என்று தெளிவுப்படுத்துகின்றார்.

இங்கு ஒரு முக்யமான விஷயம் கவனிக்க வேண்டும். திருப்பாணாழ்வாரின் கொள்கைக்கு விரோதமில்லாதபடி, அவர் காலடி படாதபடி காண வைத்தான் அரங்கன்.

அவரை ஆட்கொண்ட நேர்த்தியை என்னவென்று சொல்வது..?

சாதாரணமாய் தோளின் மீது அமருபவர் சுகமாயிருப்பவர். அவரை சுமப்பவர் கஷ்டப்படுவர். இங்கு தோளின் மீதமர்ந்த திருப்பாணாழ்வார் கூசி நெளிகின்றார். அரங்கன் ஆணையினால் சுமையை ஒரு பாரமாய் கருதாதது பரமனின் கிருபையையெண்ணி ஆனந்தமாய் சுமக்கின்றார் லோகசாரங்கர். இந்த வேறுபாட்டினைக் கவனியுங்கள்.

வேறுபாடுகள் மாறுபட்டு, இந்த ஜீவன் உருப்பட்டு உய்வது உன்னிடத்தில் மட்டுமே சாத்தியம் அரங்கா!

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: