Srirangapankajam

February 7, 2009

Pesum Arangam-29

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:44 pm

Chapter-29
07.02.2009
 
நம்பெருமாளின் பாதுகையில் இழைக்கப்பெற்றுள்ள சிகப்புரத்னங்கள் எல்லையில்லாத பிரகாசமாய் ஜ்வலித்தபடி உள்ளது.        இந்த காந்தியானது பெருமாளைத் தவிர மற்றவைகளில் ஆசையுடையவராய் இருப்பவர்களுக்கும்,      பெருமாளுடைய அநுபவம் தவிர வேறு எந்த சுகமும் அறியாதிருப்பவர்களுக்கும், அகிய இரு தரப்பினரையுமே சந்தோஷப்படுத்துகிறதாய் இருக்கின்றது.  இந்த பிரகாசத்தினை அனுபவிக்கின்ற, ஜனங்களுடைய பாபங்களானது, விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சிகள் போன்று, பொசுங்கி போகின்றது. 
 
பெருமாளிடத்தில் அனுபவிக்கும் ஆழ்வார்களின் பாசுரங்களை சிகப்பு ரத்னமாக எடுத்துக்கொண்டால், அந்த பாசுரங்களின் கருத்துக்கள், பெருமாளிடத்தில் எல்லையில்லாமல் சந்தோஷப்படுகின்றது.  ஜனங்கள் கூடவே வளர்ந்து வந்த எல்லையில்லாத பாபங்களை, விளக்கில் வந்து வீழும் விட்டில் பூச்சிகள் போன்று, பொசுக்குகின்றது என்கிறார். 
 
 
நம்பெருமாளின் பாதுகையில் இழைக்கப்பட்ட ரத்னங்கள் உயர்ந்த சூரியனாக இருக்கின்றன.  எல்லாகாலத்திலும் எல்லா வேதங்களின் வாசனைகளை உடைத்தாயுள்ளன.  பெருமாளுடைய திருவடியாகின்ற திருவடித் தாமரையினை மலரச்செய்து ஸம்ருத்தமாகப் பண்ணுகின்றன.
 
ஆழ்வாரின் பாசுரங்கள் அனைத்து வேதங்களின் எளிமைப் படுத்தப்பட்ட கருத்துக்கள்!  பெருமாளின் திருவுள்ளத்திற்கு இதமளிக்கக் கூடியது!  கேட்கிறவர்களுக்குத் தெளிவான ஞானம் தந்து, அவர்களது அஞ்ஞானத்தைப் போக்கடிக்கக் கூடியது.  இந்த பாசுரங்களின் அபிப்ராயம் மனதில் பட்டால் அதனால் ஒருவனுக்கு எல்லாவிதமான அழகும் சுகமும் வரும்.
 
அருணமணயஸ் தவைதே ஹரிபதராகேண லப்தமஹிமாந:!
கமயந்தி சரண ரக்ஷே த்யுமணிகணம் ஜ்யோதிரிங்கணதாம் !!(610)
 
ஹே! பாதுகையே! உன்பேரில் இழைக்கப்பட்டுள்ள சிகப்புரத்னங்களின் காந்தியானது நம்பெருமாளின் உள்ளங்காலில் பட்டு கோடி பங்கு அதிகமாகப் பிரகாசிக்கின்றது.  இந்த பிரகாசத்திற்கு முன் கோடி சூர்யர்கள் சேர்ந்தாலும் அது மின்மினிப்பூச்சி போல்தான் உள்ளது.
 
(ஒருவர் பதினாயிரம் சாஸ்திர ஞானமிருந்தாலும், ஆழ்வார் ஆச்சார்யர்களுடைய உபதேசங்களாலே வரப்பட்ட ஞானங்கள் இல்லாவிடின், ஏதும் உபயோகமில்லை. ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளினால் உண்டான ஞானம் பெருமாளின் அனுக்கிரஹம் உள்ளதினால் மிகவும் ஸ்ரேஷ்டமானது.  இந்த ஞானம் இல்லாத ஞானம், வெறும் சூன்யமே!)

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: