Srirangapankajam

February 5, 2009

Pesum Arangam-28

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:35 pm

ஸ்தாநே த்வாச்யுத பதாவநி! பத்மராகா:
தேஜோமயா: ப்ரசமயந்தி தமோ மதீயம்!
சித்ரம் ததேததிஹ யஜ் ஜநயந்தி நித்யம்
ராகாத்மகேந மஹஸா ரஜஸோ நிவ்ருத்திம் !!
                      -(பாதுகா ஸஹஸ்ரம்:598)

நம்பெருமாளின் பாதுகையிலுள்ள சிகப்பு ரத்னங்களின் ஜ்வலிக்கின்றன.
உன் திருவடிகளைத் தரிசிக்கும் போது இந்த ஜ்வலிக்கின்ற பிரகாசமான கதிர்கள் என்னுடைய அஞ்ஞானமாகின்ற இருட்டைப் போக்கடிக்கின்றன.
இருட்டாகின்ற அஞ்ஞானம் ரஜோ குணத்தின் ஒரு அம்சம்.  சிகப்பு ரத்னங்களின் காந்தியினை நாடுகின்ற நம் ஆசை என்கின்ற ரஜோ குணத்தினாலேயே, ஒரு ரஜோ குணத்தின் ஒரு அம்சம் இன்னொரு ரஜோ குணத்தின் ஒரு அம்சத்தினாலேயே போக்கடிக்கப்படுவது பெரிய ஆச்சர்யம்!  அது இந்த பூலோகத்தில் மட்டுமே சாத்தியம் – அதுவும் நம்பெருமாள் பக்கலிலே மட்டுமே சாத்தியம்!

நம்முடைய பூர்வாச்சார்யர்கள் வேண்டிய கிரந்தங்கள், வியாக்கியானங்கள் பண்ணி வைத்திருக்கின்றனர்.  அதிலுள்ள ஒரு வாக்கியம் போதும்!  அதனுடைய முழுமையான அர்த்தம் அறிந்தாலே போதும்.  மிகப் பெரிய மாறுதலையடைவோம். வித்வான்களும் இந்த கிரந்தங்களை ஸேவிக்கின்றார்கள் – உபந்யாஸம் செய்கின்றனர்.  99 சதவீதம் வித்வான்களாகட்டும், கேட்கின்ற, இந்த கிரந்தங்கள் படிக்கின்ற நாமாகட்டும்,  இந்த விஷயங்களில் மனது ஒன்றி அவனை நினைப்பதில்லை.  மனம் அவன் திருவடிகளில் ஒன்றி விட்டால் கோபம், கர்வம் முதலான கெட்ட குணங்கள் விலகும்.  சுகம், துக்கம் அறியோம்!
இது நம்முடைய அஞ்ஞானம்.  இந்த அஞ்ஞானம் நல்லவொரு ஆச்சார்யனின் கடாக்ஷத்தினால் ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆசை கொண்டு அதனை ப்ரியமோடு அநுசந்திப்பதினால் விலகும்!

ஆழ்வார்கள் பெருமாள் திருவடியின் குணங்களை பாசுரங்கள் செய்து அனுபவிக்கின்றார்.  அவ்வப்போது மயங்கி விழுகின்றார்.  மீண்டும் தெளிகின்றார்.  மயங்குகின்றார்.  இதனை ஸ்வாமி தேசிகன் நம்பெருமாளின் நடையிலே அனுபவிக்கின்றார்.  நம்பெருமாளின் பாதுகையில் பதியப் பெற்ற சிகப்பு ரத்னங்களின் காந்தியையும், நம்பெருமாளின் சஞ்சாரத்தினையும் ஸேவிக்கும் போது நம்பெருமாளின் திருவடியாகிய திருவடித் தாமரையிலுள்ள தேனை வயிறுமுட்ட சாப்பிட்டு உடம்பெல்லாம் சிவந்து ஆடி விழுந்து கொண்டு நடப்பது போலுள்ளதாம்!

யோகிகளெல்லோரும் கண்ணனை ஸேவிக்கும் போது தாங்கள் கோபியராக போக வேண்டுமென்றே ஆசைப்பட்டார்களாம்  அதுபோன்று நாமும் நம்பெருமாளின் திருவடிகளை ஸேவிக்கும் போது, ஆழ்வார்களின் ஸ்ரீஸூpக்திகளில் பிரேமை ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவோம்!  பிரார்த்திப்போம்!

Blog at WordPress.com.

%d bloggers like this: