Chapter-41
26.02.2009
இவ்வுலகு (1) அசைகின்றவைகள் (2) அசையாதவை ஆகிய இரு தன்மைகளையுடையது.
இவ்வுலகில் ஏற்படும் ஆபத்துக்கள் (1) மனுஷ்யாளால் ஏற்படுவது (2) தெய்வத்தினால் ஏற்படுவது.
இந்த உலகைக் காப்பாற்ற (1) தயை (2) பொறுமை இவையிரண்டும் தேவை.
பெருமாளுடைய இவ்விரு குணங்களும் வடிவெடுத்து வந்ததுதான் பாதுகைகளாகும்.
தயை என்பது ஒரு ஜீவன் வருந்தித் தவிக்கும் போது எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் அந்த ஜீவனுடைய வருத்தத்தினை போக்குவதாகும். இவ்விரு பாதுகைகளும் இவ்வுலகில் குறைவில்லாத சுகத்தினையும், மோக்ஷ சுகத்தினையும் அருள வல்லவை.
ஒரு காரியம் நடக்க வேண்டுமானால் (1) நம்முடைய முயற்சி (2) தெய்வ அனுக்ரஹம் ஆகிய இரண்டும் தேவை.
பாதுகைகள் நம்முடைய க்ஷேமத்திற்காக தெய்வம் செய்ய வேண்டிய வேலையும், மனுஷாள் செய்ய வேண்டிய வேலையும் இரு உருவமெடுத்து வந்தது போலுள்ளது. பாதுகையாய் அவதாரம் எடுத்த ஆழ்வார் முதலான ஆச்சார்யர்கள், இவ்வுலகின் க்ஷேமத்திற்காக ஜனங்கள் செய்யவேண்டிய வேலைகளைத் தாமே செய்தார்கள். அவ்வாறு செய்வதற்குரிய ஒத்தாசையான வேலைகளையும் செய்வித்தார்கள். தெய்வத்தினையும் செய்வித்து எல்லாவற்றையும் காப்பாற்றினார்கள்.
நம் சரீரத்தில் (1) ஜீவன் (2) இந்த ஜீவனுக்கு எஜமானான தெய்வம் இரண்டும் உள்ளது.
பாதுகைகள் நம் குற்றத்தினைப் பொருட்படுத்தமால் நமக்காக தெய்வத்திடம் சிபார்சு செய்து நம்மை கரை சேர்க்கின்றது.
பெருமாள் (1) லீலாவிபூதி (2) நித்யவிபூதி ஆகிய இரண்டிலும் வசிக்கின்றான். லீலாவிபூதி என்பது 14 லோகங்களும் அடங்கிய ஓர் இடம். பூமிக்கு மேல் 7 லோகம். பூமிக்குக் கீழ் 7 லோகம். இவ்விரண்டும் சேர்ந்தது லீலாவிபூதி.
நித்யவிபூதியானது பரமபதம் – அழிவில்லாதது.
பெருமாளைப் பற்றி விரிவாக நமக்கு எடுத்துரைப்பது (1) வேதங்கள் (2) ஸ்மிருதிகள் ஆகிய இரண்டும் ஆகும்.
சாஸ்திரம் (1) அபரவித்தை (2) பரவித்யை என இருவகையாக உள்ளது. அபரவித்தையானது பகவானையும், அவனையடைய வேண்டிய கார்யங்களைப் பற்றியும் தீர்மானிக்கக் கூடிய அறிவு
(2) பரவித்யை என்பது பகவானைப் பற்றிய த்யானம் மட்டுமேயாவது.
(1) யோகம் (2) க்ஷேமம் ஆகிய இரண்டும் இன்பமளிக்கக்கூடியது. யோகம் என்றால் ஒரு வஸ்து நமக்கு வசப்படுதல். க்ஷேமம் என்றால் அது எவ்வித குறையுமில்லாதிருப்பது.
காலமானது (1) தக்ஷிணாயனம் (2) உத்தராயணம் ஆகிய புண்ய காலங்களையுடையது.
ஒரு நாளானது (1) ப்ராத ஸந்த்யை (2) ஸாயம் ஸந்த்யை ஆகிய இரண்டு பிரிவாகும்.
மேற்கூறிய அனைத்தும் இரண்டு பாதுகைகளாய் அவதாரம் எடுத்துள்ளன.
(1) புண்ணியம் (2) பாபம் ஆகிய இரண்டும் இரு விலங்குகள். புண்ணியம் சுகத்தினை உண்டு பண்ணும்
(2) பாபம் துன்பத்தினை உண்டு பண்ணும்.
இந்த இரண்டையும் கடந்து நிற்பதுதான் மோக்ஷமாகும்.
பாதுகைகள் இரண்டும் இந்த இரு விலங்கினின்றும் நாம் அகப்பட்டு கொள்ளாதபடி நிலையான மோக்ஷத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.
பெருமாளைத் தவிர மற்றப் பலன்களை ஆசைப்பட்டவர்களைப் பெருமாள் தன்னிடம் அழைத்துக் கொள்ள மாட்டான்.
நாமோ பெருமாளைத் தவிர மற்றைய சிந்தனைகளில்தாம் பொன்னான நம் பொழுதினைப் போக்கிக் கொண்டிருக்கின்றோம்.
இதிலிருந்து மீள ஒரே வழி –
பாதுகையினிடத்து பிரபத்தி – அதாவது ஆச்சார்யன் திருவடிகள்தாம்.