Srirangapankajam

November 13, 2008

PESUM ARANGAN-145

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:10 pm
Chapter-145
 12.11.2008
 
 

ஸ்ரீவைணவ ஸம்ருத்தியினால் நாளுக்கு நாள் ஸ்ரீரங்கம் திணறியவண்ணமாயிருந்தது.   கோயில் கந்தாடையண்ணன், வானமாமலை ஜீயர், அப்பிள்ளை, அப்பிள்ளார், எறும்பியப்பா,பிரதிவாதி பயங்கரம் அண்ணா,  உத்தமநம்பிகள், என பலர்,  சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அவரவர்தம் கோஷ்டியுடனே மணவாள மாமுனிகளின் திருவடிகளை ஆஸ்ரயித்தவண்ணமிருந்ததினால் மாமுனிகளின் மடம் நிரம்பி வழிந்தது.
அரங்கன் அணுவளவு கூட மாமுனிகளுக்கு ஏதும் அவமரியாதை ஏற்படாது, அணுக்கத் தொண்டனாய் காத்து வந்தான்.
 
ஒரு சிலர் ஜீயரின் நிஜாகாரமான சேஷரூபத்தினை ஸேவிக்கும் பாக்யம் பெற்றனர்.
 
சடகோபக்கொற்றி என்னும் திருநாமம் கொண்ட ஒரு ஸாத்விகை, மாமுனிகளின் சந்நிதியில் சிரத்தையுடனே கைங்கர்யபரராய், திவ்யபிரபந்தத்தினையும், ரஹஸ்யத்தையினையும் அறிந்தவளாய், அந்த அறிவை மாமுனிகளின் திருவடிகளை ஆஸ்ரயித்து அதிகரித்தவளாய் இருந்து வந்தாள்.
 
ஒரு நாள் மத்யாநிக நேரம் மாமுனிகள் வியாக்யாந மண்டபத்தில் மாமுனிகள் திருக்கதவினைத் தாளிட்டு ஏகாந்தமாய் தம் ஆராதனை மூர்த்தியான நம்பெருமாளின் திருவடிகளில் சிந்தையராய் எழுந்தருளியிருக்கின்றார். 
 
அங்குள்ள ஜன்னல் வழியே பார்த்த சடகோபக்கொற்றிக்கு ஆதிசேஷன் ஆயிரம் பைந்தலையனாய் விஸ்வரூபமெடுத்து திருவநந்தாழ்வானாய் அரங்கன் முன் நின்றுக் கொண்டிருப்பதுக் கண்டு உடல் நடுநடுங்கி, மெய்சிலிர்த்து, வார்த்தைகள் ஏதும் வெளிவராமல் திக்குற்று, கைகளால் கூப்பியவண்ணம் “அரங்கா!“ என்று மனதிற்குள் கதறுகின்றாள். 
 
ஜீயர் அத்தைக்கண்டு திருக்காப்பு நீக்கி வெளியே வந்து அம்மையாரை நோக்கி ‘நடந்தபடியென்? ஏன் வியர்த்து நடுங்குகின்றாய்? என்று கேட்க, ஒருவழியாக அவள் தம்மைத் தேற்றிக் கொண்டு நடந்ததை அவள் விவரிக்கின்றாள். 
 
ஜீயர் சாதாரணமாக ‘அப்படியாகில் ஒருவருக்கும் சொல்லாதே கொள்” என்று நியமிக்கின்றார்.
 
பெரும்பாலும் இம்மாதிரியான அவதார புருஷர்கள் தாம் ஒரு அவதாரம் என்பதையோ தாம் இதற்காகத்தான் அவதரித்துள்ளோம் என்பதையோ அறிய மாட்டார்கள்.  அவர்களது நிஜாகாரம் அவர்களையறியமாலே அடுத்தவர்கள் கண்களுக்குப் புலப்படும்.  அவர்கள் சொல்லித்தான் இவர்கள் அறிவார்கள் தாம் அம்மாதிரியா ஸேவை சாதித்தோம்? என்று.
பல நாட்கள் பல பேர்கள் தாம் கண்ட காட்சியினை இவர்களுக்குக் கூற இவர்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வர். 
 
இம்மாதிரியான நிகழ்வுகளை நான் எனது நெருங்கிய ஒருவரிடம், பல வருடங்களுக்கு முன்பு அனுபவித்துள்ளேன்.  அவருக்கு ஏதும் தெரியாது “நாம்தானா அம்மாதிரி ஸேவை தந்தோம்“ என்று. 
நான் சொல்லித்தான் தெரிந்து கொள்வர்.  இதெல்லாம் சாத்தியம்தான்.  நான் கண் கண்ட உண்மை.   இந்த நிகழ்ச்சியினை எழுதும்போது நான் அடைந்த அந்த தாக்கம் நினைவுக்கு வர இதனை எழுதுகின்றேன். 

Blog at WordPress.com.

%d bloggers like this: