Srirangapankajam

October 16, 2008

PESUM ARANGAN-128

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 11:22 pm
Chapter-128
13.10.2008
 
திருமலைக்கு செஞ்சி மன்னனான கோபண்ண உடையார் வந்திருப்பதை அறிந்த சந்த்ரகிரி ப்ரபு, அவரைத் தம் அரசவைக்கு தகுந்த உபசாரங்களுடன் அழைக்கின்றான். செஞ்சி மன்னன் சந்த்ரகிரி ப்ரபுவிடம், அரங்கனை மீண்டும் திருவரங்கத்தின் ஆஸ்தானத்தில் எழுந்தருளைப் பண்ணுவதற்கு வசதியாக, முதலில் தம் அரசாட்சிக்கு உட்பட்ட செஞ்சியில் பாதுகாப்பாக எழுந்தருளச் செய்ய அனுமதி கேட்கின்றான். சந்த்ரகிரி மன்னனுக்கு மட்டில்லா மகிழ்ச்சி. அரங்கனை எழுந்தருளப் பண்ணித் தருகிறார். அரங்கன் ஒரு சிறு படையுடனும் கொடவருடனும் திருமலையில் இருந்து புறப்பட்டு செஞ்சியில் சிங்கபுரம் என்ற இடத்தில் எழுந்தருளுகிறான். ஆராதனைகள் அனைத்தும் குறைவின்றி நடந்து வந்தன.

 

திருவரங்கத்தினை நிர்வகித்து வந்த கண்ணனூரில் இருக்கும் உலுக்கானின் தளபதி நோய்வாய்ப்படுகிறான். அங்கிருந்த வைத்யர்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறியதால், தகுந்த மருத்துவ உதவி கிடைக்காமல் பெரும் அவதியடைந்தான். அரங்கன் செஞ்சியை அடைந்ததை அறிந்த சிங்கபிரானுடைய தம்பி திருமணத்தூண் நம்பிஎன்பவர், உத்தமநம்பியை செஞ்சிக்கு அனுப்பி வைக்கிறார். கண்ணனூரில் சுல்தானுடன் இருந்த தேவதாசி, சுல்தான் நோய்வாய்ப்பட்டுள்ளதையும், அவனுடைய படைகள் சோம்பி உள்ளதையும், படை எடுக்க இதுவே சரியான தருணம் என்பதையும், தனது அந்தரங்க ஒற்றர்கள் மூலம் கோபண்ண உடையாருக்கு அறிவிக்கிறாள்.

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: