Srirangapankajam

October 6, 2008

PESUM ARANGAN-124

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 8:03 pm
Chapter-124
05.10.2008
 
 
ஓராண்டு காலம் அங்கு எழுந்தருளுயிருந்த நம்பெருமாள் தம் தேவிமாரோடும், நம்மாழ்வாரோடும் அங்கிருந்து கடலில் இரு ஓடத்தில் பயணிக்கின்றார். 
 
திடிரென, நம்மாழ்வார் எழுந்தருளியிருந்த படகு கவிழ்ந்து நம்மாழ்வார் கடலினுள் மூழ்குகின்றார். 
 
மாலைநேரம்….  இருள் கவிய தொடங்குகின்றது.  கலங்குகின்றனர் அனைவரும். 
 
அந்தநேரம் ஒரு கருடன் வட்டமிட்டு அந்த கடலில் ஒரு இடத்தினைத் தொட்டுக் காட்டி பறந்தது.  அந்தவிடத்தில் மூழ்கிய அவர்கள் நம்மாழ்வாரைக் கண்டு மகிழ்வுடனே ஆழ்வாருடன் மேலே எழும்பி, மீண்டும் நம்பெருமாளுடனே படகில் சேர்த்தியில் எழுந்தருளப்பண்ணிப் பயணிக்கின்றனா;!  (நம்பெருமாளுக்கு ஆழ்வாரை தனியே கடலில் பயணிக்க வைத்தது பிடிக்கவில்லையோ..? ) 
 
அங்கிருந்து கா;நாடக மாநிலத்தின் திருக்கணாம்பி என்ற ஊருக்கு ஆழ்வாருடனே அரங்கனும் அவனது தேவிமார்களும் எழுந்தருளினர். 
 
இந்த ஊரில் அரங்கனும் ஆழ்வாரும் பல ஆண்டுகள் இருந்ததாகச் சொல்லுகின்றனா;.  இந்த காலகட்டத்தில் ஒரே வட்டமணையில் இருவரும் எழுந்தருளினர். 
(பராங்குசநாயகியுடன் சேர்த்தி……!?) 
 
நம்பெருமாள் போர உகந்தருளி தம் முத்துச்சட்டையையும் ஆழ்வாருக்கு அணிவித்து திருவுள்ளம் உகக்கின்றார். 
 
ஒரே வட்டிலிலிருந்து இருவருக்கும் திருவாராதனம் கண்டருளுகின்றனர்.  ஆழ்வார் திருப்படிகத்திலிருந்து தீர்த்தமும், அழகிய மணவாளன் ஸ்ரீசடகோபமும் கோஷ்டியாருக்கு சாதிப்பார்கள்.
 
பின்னர்  நம்பெருமாளும் உபயநாச்சிமார்களும் அங்கிருந்து புறப்பட்டு புங்கனூர் வழியாக திருநாராயணபுரம் எழுந்தருளுகின்றார்.


திருநாராயணபுரத்தில் சிலகாலம் பாதுகாப்பாகயிருந்து பின்னர் அங்கிருந்து திருமலைக்குப் புறப்படுகின்றார்.

 

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: