Srirangapankajam

October 1, 2008

PESUM ARANGAN-122

Filed under: PESUM ARANGAN — Tags: , , — srirangapankajam @ 8:24 pm
Chapter-122
30.09.2008
 
உலுக்கான் ஆந்திராவிலும் பலவிடங்களில் படையெடுத்து தம்முடைய ஆக்கிரமிப்பை விரிவு செய்து வந்தான். 
கி.பி. 1326-27ல் இவனது ஆட்சிகுட்பட்டப் பகுதியாக கம்பிலி என்னும் ஊரும் கைக்கொள்ளப்பட்டது.   இந்த ஊரின் பொக்கிஷக்காவலர்களான, ஹரிஹரர், புக்கர் ஆகியிருவரும்  கைது செய்யப்பட்டு டில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.  அங்கேச் சென்ற அவர்களிருவரும் இஸ்லாமிய மதத்தினைத் தழுவினார்கள். 
 
உலுக்கானின்  நம்பிக்கைக்குரியவர்களாகவும் ஆனார்கள்.
 
உலுக்கான் இவர்களிருவருக்கும் தமது போர் முறைகளையும், தந்திரங்களையும் கற்று தருகின்றான்.  சில வருடங்களில் இவ்விருவரும் பெரும் வீரர்களாய், உலுக்கானால் பெரிதும் மதிக்கப்படுபவர்களாய் விளங்கினர்.
 
சில வருடங்களில் கம்பிலியில் பெருங்கலவரம் ஒன்று
ஏற்பட்டு, அப்போது அங்கு அதிகாரத்திலுள்ள சுல்தான்களால் கலவரத்தினை அடக்க முடியவில்லை. அந்த சுல்தான் உலுக்கானின் உதவியினை நாடினார்.

உலுக்கான் கம்பிலியை தாய் மண்ணாகக் கொண்ட ஹரிஹரனையும், புக்கரையும் இந்த கலவரத்தினை அடக்க அனுப்புகின்றார்.  கம்பிலியை அடைந்த இவ்விருவரும்  கலவரத்தை ஒடுக்குகின்றனர். 
 

அந்த சமயம் சிருங்கேரி மடத்தில் பட்டத்திலிருந்த
வித்யாரண்யர் எனும் சந்யாசியோடு ஒரு தொடர்பு
ஏற்படுகின்றது.  இவ்விருவரும் தாம் தழுவிய இஸ்லாமிய மதத்தினை உதறித் தள்ளுகின்றனர்.  இவரை தம்முடைய ஆச்சார்யனாக ஏற்றனா;. தாங்கள் கைப்பற்றிய கம்பிலியோடு ‘கூட்டி” என்ற பிரதேசத்தினையும், சுற்றுப்புறங்களையும் இணைத்து கி.பி. 1336ம் ஆண்டு வித்யாரண்யரின் ஆசியோடு, ‘விஜயநகர சாம்ராஜ்யம், எனும் விடிவிளக்கினை,  இந்து சமயத்தின் ஒரு நம்பிக்கை ஜோதியினை,   துங்கபத்திரை நதிக்கரையில் அனகொண்டா என்னும் இடத்தில் ஸ்தாபிதம் செய்தனர்.

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: