Srirangapankajam

July 22, 2008

PESUM ARANGAN-79

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 4:57 pm

நரசிங்க மேத்தா என்பவரால் ‘வைஷ்ணவ ஜனதோ’ என்ற ஒரு சிறந்த பாடல் இயற்றப்பட்டது. இதனை காந்தியடிகள் மிகவும் விரும்பி தனது பிரார்த்தனைக் கூட்டங்களில் தவறாது பாடுவது வழக்கம். திரு வி.க. அவர்கள் அதனை அப்படியே மொழிபெயர்த்துத் அற்புதமாக தமிழில் பாடியுள்ளார்.

பிறர் துயரை தன் துயராப் பேணி அவர்க்கேவல் செய்யும்
திறன் அதனைப் பாராட்ட திடமுடையான் எவனவன்?
எல்லாரையும் வணங்கி இகழாதான் ஒருமனையான்
சொல்லாரும் மனந்தூயான் தொழுந்தகையான் அவன்தானே!
சமநோக்கன் தியாகமுளான் தாய் என்பான் பிறர்மனையை
அமைநாவால் பொய்மொழியான் அந்நியர்தம் பொருள் தீண்டான்
மோகமொடு மாயை நன்னான் முழு வைராக்கியமுடையான்
ஏகன் பெயர் இன்பந்தோய்ந் திருந்தீர்த்தம் உடலாவான்
காமவுலோ பஞ்சினமும் கரவுமிலான் வைணவனே
ஏமநல்கும் அவன் காட்சி எழுபானோர் தலைமுறையே!

+++++++++++++++++++++++++++++

கூரத்தாழ்வார் மறைவுக் குறித்து தெரிந்ததும் உடையவர் மனமொடிந்து போனார். ஆழ்வான் திருமாளிகை நோக்கி விரைகின்றார். அழத வண்ணமிருந்த ஆழ்வானின் குமாரர்களைப் பார்த்து, ‘க்லேசியாதே’ (வருத்தப்படாதீர்கள்!) என்று தேற்றுகின்றார். பட்டரைப்
பார்த்து சரம கைங்கர்யங்களைப் பண்ணச்சொல்லி ஆணையிடுகின்றார். பட்டரும் மற்றுமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களும்,

‘ஸர்வகர்மாணி ஸூக்தேன காயத்ர்யா வைஷ்ணவேந ச !
நாராயணாநுவாகேந ஸ்நாபயேத் பிதரம் ஸூத: !!”
-பிரப்பந்நாம்ருதம்-
விஷ்ணு சூக்தத்தினாலும், விஷ்ணு காயத்ரியினாலும் நாராயணானுவாகத்தினாலும் அபரகார்யங்கள் அனைத்தையும் செய்து பிள்ளையானவன் பிதாவை ஸ்நானம் செய்விக்க வேண்டும்.
என்கிறபடியே ஆழ்வானை புனித காவிரி நீரினால் நீராடப்பண்ணி கேசவாதியான திருநாமங்களைச் சாற்றி அலங்கரித்தனர். ஸ்ரீசூர்ண பரிபாலனம் பண்ணினர்.

ப்ரஹ்மமேத வ்ரதம் ப்ரோக்தம் முநிபிர்ப்ரஹ்மதத்பரை: !
மஹாபாகவதாநாம் ஹி க்ர்த்தவ்யமிதமுத்தமம் !!
-ப்ரபந்நாம்ருதம்-

ப்ரஹ்மமேத வ்ரதமானாது ப்ரஹ்மத்திடமே ஈடுபட்ட முனிவர்களால் உபதேசிக்கப்பட்டது. மிகச் சிறந்த இந்த ஸம்ஸ்காரவிதி மஹாபாகவதர்களுக்குச் செய்யப்பட வேண்டியது.

மஹாபாகவதோத்தமரான கூரத்தாழ்வானை பட்டர் ப்ரஹ்மமேத விதிப்படி ஸம்ஸ்கரித்து பள்ளிபடுத்தருளிப் பன்னிரெண்டு நாளும் செய்யுங் க்ருத்யங்களை சாஸ்த்ரோக்த ப்ரகாரம் செய்தாh;.

சுபாதௌத்விஜவர்யைஸ்ச ஸர்வஸம்பச்சுபாவஹம்
ஸஹஸ்ர ஸாகாத்யயநம் காரயேத் வைதிகோத்தம:
அஸூபாந்தே விசேஷண த்ராமிடீ ப்ரஹ்மஸம்ஹிதா
அத்யேதவ்யா த்விஜவரைராசௌசாகவிநாஸிநீ
-ப்ரபந்நாம்ருதம்-

வைதீகர்களில் சிறந்த ஸ்ரீவைஷ்ணவன், சுபகார்யங்களின் ஆதியில், சிறந்த நற்செல்வங்களையும், மங்களங்களையும் அளிக்கும் திருவாய்மொழி ஸேவையை அந்தணர் தலைவர்களைக் கொண்டு செய்விக்கக்கடவன். அசுப காரியங்களின் முடிவிலும் ஆஸௌசபாபத்தைப் போக்கடிக்கும் திராவிட வேதமானது அந்தணர் தலைவர்களால் ஸேவிக்கப்படவேண்டும்.

என்று சொல்கிறபடியே திருவாய்மொழி பாசுரத்தினை அனைவரும் அனுஸந்தித்தனர்.

யதா துஷ்யதி தேவேசோ மஹா பாகவதார்ச்சநாத் !
ததா ந துஷ்யதே விஷ்ணுர் விதி வத் ஸ்வார்ச்சநாதபி !!

மஹாபாகவதர்களை அர்ச்சிப்பதால் தேவர் தலைவனான விஷ்ணு உகப்பது போல், முறைப்படி தன்னை அர்ச்சிப்பதாலும் உகப்பதில்லை

ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவருக்கும் அமுது செய்தருளினர்.

மறுநாள் உடையவர் பட்டரை அழைத்துக் கொண்டு நம்பெருமாளை ஸேவிக்க எழுந்தருளுகின்றார். அழகிய மணவாளன் திருமண்டபத்தில் தண்டன் சமர்ப்பித்து, பட்டரைக் கையைப் பிடித்துக் கொண்டுபோய் பெரியபெருமாளை ஸேவைப் பண்ணி வைக்கின்றார்.
அரங்கன் அர்ச்சகமுகநே திருவாய் மலர்ந்தருளுகின்றார்.
‘ஆழ்வானையிழந்தோமே என்று வ்யாகுலப்படாதே!
நம்மை ஆழ்வானாக நினைத்திரும்’ என்றருளிச் செய்கிறார். உடையவர் இதனைக் கேட்டு உகக்கின்றார்.
பெருமாளிடத்துப் பேசுகின்றார், ‘தேவரீர் இவர்க்கு ஆயுஸ்யைக் கொடும் அடியேன் வித்யைகளை
அப்யஸிக்கின்றேன்’ என்று விண்ணப்பம் செய்கின்றார். அரங்கன் புன்முறுவலோடு ஏற்று தீர்த்தம், பிரஸாதம் அளித்து கௌரவிக்கின்றான். தம் மடம் எழுந்தருளுகின்றார் உடையவர். எம்பாரை நோக்கி,
”இவரை நம் தர்ஸநப்பரவர்த்தராகும்படி சாஸ்த்ராப்யாஸம் பண்ணுவியும்’ என்று அருளுகின்றார்.
-Posted on 21st july 2008

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: