Srirangapankajam

June 13, 2008

PESUM ARANGAN-47

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 3:10 pm

அரையர் சேவை என்பது தற்சமயம் வெகுவாகவே, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ஆழ்வார் திருநகரி ஆகிய திவ்யதேசங்கள் தவிர மற்றைய அனைத்து சந்நிதிகளிலும் அறவே இல்லாமலே போயிற்று.

இந்த அற்புத இயல்,இசை, நாட்டியத்தோடு கூடிய தெய்வீகக் கலையை, அறநிலையத் துறையும் சரி!, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழங்கும் அரசும் சரி! கண்டுகொள்ளாமல் இருப்பது நமது துரதிரஷ்டமே!. இந்த மூன்று திவ்யதேசங்களிலும் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே ஒரளவு தொய்வில்லாமல் உள்ளது. பாக்கி இரண்டு திவ்யதேசங்களிலும் ஓரிரு அரையர்கள் மட்டுமே உள்ளனர். இதனைக் காப்பாற்ற வேண்டிய ஒரு பெரிய கடமை இன்றைய நிலைமையின் கட்டாயமாகும்.

ஸ்ரீரங்கத்தில் அரையர் நாதமுனிகள் என்பவர் இந்த கைங்கர்யத்தினை வெகு சிரத்தையோடு செய்துவந்த ஒரு மஹனீயர் ஆவார். இன்றும் இதர அரையர்களும் சிரத்தையுடனேயே செய்து வருகின்றனர். ஒருவர் அரையராக தகுதி பெறுதற்கு அதிகம் சிரத்தை வேண்டும். முதலில் நாலாயிரமும் மனப்பாடமாக தெரிந்திருக்க வேண்டும். அதனைத் தாளத்தோடு அன்வயிக்கவேண்டும். அதற்கேற்றாற் போல் அபிநயம் பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அந்தந்த பாசுரங்களின் வியாக்கியானம் அத்துபடியாகயிருக்க வேண்டும். ஸ்ரீரங்கத்தில் தம்பிரான்படி என்ற வியாக்கியானத்தை அனுசந்திக்கின்றனர். இவையெல்லாவற்றையும் விட அபிநயம் பிடித்து ஆடுவதற்கு உடல் திறன் வேண்டும். நல்ல குரல் வளம் வேண்டும். பொறுமை அதிகம் வேண்டும்.

அரையர் நாதமுனிகள் நாங்கள் அரங்கனுக்குச் சாற்றுபடி செய்வதை நன்கு அனுபவிப்பார். அதற்கேற்றாற்போல ஒரு பாசுரத்தையும் அடியோங்களுக்குச் சொல்லி விளக்கமளிப்பார். திருவாய்மொழித் திருநாளில் ஏழாம் திருநாளன்று பெருமாள் தாயார் ஸந்நிதி போகாமல், உபயநாச்சிமாரோடு எழுந்தருளாமல் தனியே திருமாமணி மண்டபம் ஆழ்வார்களின் அருளிச்செயல் கேட்பதற்காக அனைத்தையும் துறந்து எழுந்தருளுவார். அதற்கு இவர் சொல்லுவார் “நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் இருக்கின்றார். அவரது மனம் நோகாதிருக்க அரங்கனும் தனியே தன்னை அவளது நாயகனாகக் காட்டிக் கொள்வதற்காக யாருடனும் கூட எழுந்தருளாமல், தாயார் பற்றிய சிந்தனையும் இல்லாமல் பராங்குச நாயகியின் நாயகனாக எழுந்தருளியுள்ளார் என்று!“ எப்படி அனுபவிக்கின்றார் பாருங்கள்!

இவ்வளவு விசேஷமாக நடக்கும் இத்திருநாளில் இதற்கெல்லாம் ஆதாரமாகயிருந்த ஸ்ரீமந் நாதமுனிகளின் அர்ச்சா மூர்த்தி எழுந்தருளாதது ஒரு பெருங்குறைதான். . பரஸ்பரம் இரு கலையாருக்குமே இப்போதெல்லாம் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் எண்ணமேயில்லை. மேலும் மேலும் பிரச்சினைகளை வளர்க்கவே செய்கிறார்களேத் தவிர தீர்வைக் காணோம். கிருஷ்ண பரமாத்மாவின் கடைசி காலத்தில் யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டது போல் சண்டையும் சச்சரவும்தான் ஆயிற்று நமக்கு!

ஸ்ரீராம பாரதி என்றொரு மஹான், யாரும் கற்று தர முன்வராத நிலையில் தாமே இந்த தேவ கானத்தை, அரையர் இசையைக் கற்றவர். திருவள்ளுர் அஹோபிலம் போன்ற திவ்யக்ஷேத்திரங்களில் அபிநயித்து ஆடவும் செய்தார். அனைவருக்கும் கற்று தர ஏதுவாக தனக்கு அபாரகருணைப் புரிந்த மேல்கோட்டை செல்லப்பிள்ளை பெருமாளுக்கும் நித்யசுமங்கலி தாயாருக்கும் ஒரு சிறந்த கோவிலைச் சென்னையில் வேளச்சேரியின் அருகில் ஜலதாம்பேட் என்ற இடத்தில் கோசாலையுடன் நிறுவி, ஒரு பாடசாலையும் ஏற்படுத்தினார், இந்த அற்புத மனிதர். தற்போது இவர் விட்ட பணியை இவர்தம் துணைவியார் ஸ்ரீமதி சௌபாக்யலக்ஷ்மி அவர்கள் ஒரேயொரு ஆளாக அனைத்தையும் அவனருளால் கவனித்துக் கொள்கின்றார். நான் அங்கு சென்றபோது திருநாங்கூரிலிருந்து வந்திருந்த சுமார் ஒரு 10 மாணக்கர்களுக்கு அந்த திவ்யதேசத்தின் பாசுரங்களை பண்ணோடு பாடக் கற்றுக் கொடுத்து கொண்டிருந்தார். நல்ல அதிர்வலையோடு கூடிய அழகான கோவிலிது. அவசியம் ஒரு முறையாவது அங்கு தரிசித்து வாருங்கள்!
(இதன் முகவரி:
STD Pathasala, Sadagopan Tirunagar, Jalladampet, Chennai-600100 Ph: 2246 2436
E-Mail Address: alvargal12@vsnl.net or nammalvar2001@yahoo.co.in )

Herewith furnishing a mail received from my friend.

Quote

Dear swamin,

I have just read your pesum arangan article about
sri.nathamunigal and about your father. In this connection
I would like to convey to you about sri.nathamuni ariyar’s
thiruthagapanar.

Few years back, when I visited srirangam, sri.nathamuni ariyar
told me, `few minutes prior to his thiruthagapanar last breath,
he(thiruthagapanar) saw periya perumal in jothi sorupi and perumal
calling him to his place’. This kind of last minute
calling from perumal will come only to those who has been
thinking of namperuumal always and doing services to
him during his entire life……….
….kasthurirangan_99@yahoo.com

Unquote

-Posted 12th June’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: