Srirangapankajam

May 15, 2008

PESUM ARANGAN-28

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 5:04 pm

‘வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனனே” என்று விஷ்ணுசித்தனிடம் மிகவும் ப்ரீதியோடிருந்த ராஜாவை விசேஷகடாக்ஷம் செய்தருளி, தன்னுடைய இருப்பிடம் சென்றார் விஷ்ணுசித்தனாகிய பெரியாழ்வார். தான் பெற்ற பகுமானங்களனைத்தையும் டபெருங்கோயிலுடையானுக்கே ”தேவரீராலேயுண்டான தனம் தேவரீருக்கே’ என அர்ப்பணம் செய்தார். பகவானிடத்தில் புஷ்ப கைங்கர்யத்தில் ப்ரீதியுடையவராய் ” கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும், செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சியுமான திருமாலைக்கட்டி நித்யமாகச் சாற்றி மகிழ்ந்து கொண்டிருந்தார். இவரது நந்தவனத்தில் கண்டெடுத்த கோதையும் இவரது கைங்கர்யத்தில் பங்குகொண்டு, தந்தையிடம் உறுதியாக ”மானிடவர்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று கூறி, அவரிடம் நுhற்றியெட்டு எம்பெருமானின் வைபவத்தினையும் கேட்டறிந்தாள்.

எழிலுடைய அம்மனைமீர்! என்னரங்கத்தின்னமுதர் –
குழலழகர் வாயழகர் கண்ணழகர் – கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார் – என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல்வளையேயாக்கினரே!

(மிகுந்த அழகினையுடைய தாய்மார்களே! திருவரங்கம் பெரிய கோவிலில் கண் வளர்பவரும், எனக்கு அமுதம் போன்று இனிமையானவரும், அழகிய தலைமுடியையுடையவரும், அழகிய பவளவாயையுடையவரும், அழகிய திருக்கண்களையுடையவரும், தாமரைமலர் போன்று அழகிய திருநாபியுடையவருமாகிய பெரியபெருமாள் – என்னுடைய கைவளையல்களை கழலாத வளை என்பதிலிருந்து கழன்று ஒழிகின்ற வளை என்று மாற்றினாரே!)

அரங்கனின் குழலழகு, வாயழகு, கண்ணழகுகளில் லயித்து ”வந்தானோ திருவரங்கன் வாரானோ வென்றென்றே வளையுஞ்சோரும்” என வைராக்கியத்துடன் மனமுருகி மலர்கண்கள் பனிப்ப அழகிய மணவாளரையே காமித்திருந்தாள்.

இறைவனைத் தன்னுள் அடக்கியவன்தான் பெரியவன் என்று உணர்த்தியதால் இவர் ‘பெரியாழ்வார்;’ ஆனார்;. இவர் பரிவுடன் பல்லாண்டு பாடினார் என்றால், ஒருபடி மேலே சென்று எம்பெருமானையே துயில் எழுப்பி, அறிவுரை கூறியதால், இந்த ஆளுமையால் இவள் ‘ஆண்டாள்” ஆனாள்!.

இங்கு ஒன்றை கவனித்தீh;களா? பெரியாழ்வாருக்குப் பின்னர் சில ஆழ்வார்கள் சில திவ்யக்ஷேத்திரங்களைப் பாடியுள்ளனர். இவர்களால் பாடல் பெற்ற ஸ்தலங்களனைத்தும் சேர்ந்துதான் 108 திவ்யக்ஷேத்திரமானது. ஆனால் பெரியாழ்வார் 108 திவ்யக்ஷேத்திரத்தின் எம்பெருமானார்கள் பற்றியும் ஆண்டாளுக்குரைக்கின்றாh;. ”ஆகில் நூற்றெட்டு திருப்பதியிலெம்பெருமான்களில் ஆருக்கு வாழ்க்கைப்படுகிறாய்?” என வினவுகின்றாh;. எப்படி இவருக்கு 108 திருப்பதிகளைப் பற்றியும் ஞானம் பிறந்தது? அவனருளால், தானாக வந்த வேதஞானம்தான்! இந்தத் தொடரில் முன்பே எழுதியதை, வேதம் ‘சதம் வோ அம்ப தாமானி ஸப்தச்ச’ என்று சொன்னதை, ஞாபகப்படுத்திப் பாருங்கள். வேதமறிந்ததால் அதனை இவர் அறிந்தார். ஆண்டாளுக்கும் அறிவித்தார்!. ஆண்டாள் இவர்களின் தலைவனையறிந்து தன் மனத்தேயுகந்தாள்!

பற்றிற்றெல்லாம் பற்றி அவனையும் பற்றுகை பக்தி
விடுவதெல்லாம் விட்டு தன்னையும் விடுகை பிரபத்தி

– வார்த்தா மாலை-

அதீதமான காதலுடன் அரங்கனைப் பற்றி, பிரபத்தியைக் காதலும், கற்பனையும் கலந்து வழங்குகின்றாள் ஆண்டாள்!

-மேலும் பேசுவோம்- Posted on 14.5.2008.

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: