Srirangapankajam

May 4, 2008

PESUM ARANGAN-21

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 3:50 pm

சத்குரு தியாகராஜர் 17வது நுhற்றாண்டில் கி.பி 1767ல் பிறந்தவர். இவர் இந்த சித்திரை உற்சவத்தினைக் கண்டுகளிக்க ஸ்ரீரங்கத்தில் சுமார் ஒரு வார காலம் தங்கியிருந்துள்ளார். இவர் இயற்றிய ‘ஸ்ரீரங்க பஞ்சரத்னம்” என்னும் ஐந்து கிருதிகள் பிரசித்தமானது. இதில் ‘ராஜூ விட்டல’ என தோடிராகத்தில் தொடங்கும் கிருதியில் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வரும் அழகினையும், நம்பெருமாள் திருவாபரணத்தையும் மிக அழகாக வர்ணிக்கின்றார். அவர் பலமுறை கோயிலினுள் இந்த கிருதியைப் பாடமுயன்றும், ஏதோ அப்போதுள்ள சில நிர்பந்தங்களால் முடியமால், பெருமாள் மேலச்சித்திரை வீதி வரும்போது, நம்பெருமாளோடு பாடிக் கொண்டே வந்தராம். குதிரைவாகனத்தில் இந்த ரெங்கராஜாவும் மெல்ல காது கொடுத்து கேட்டபடி அனுபவித்தபடி வந்திருப்பார்.

இதில் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

கோவிலினுள் பாட முடியாமற் போனதற்காக சத்குரு தன் முயற்சியை கைவிடவில்லை. கோபித்துச் செல்லவில்லை.

அரங்கனும் வெகுசுலபராக ”ஆட்பார்த்துழி தர’ அவ்வப்போது அடிக்கடி வெளியே உலா வருகின்றார். இது அரங்கனின் சித்தமாக கூடயிருக்கலாம். தான் உலா வரும் போது அவர் பாடுவதைக் கேட்கலாமே என்று அவனது ஆசையாகக் கூடயிருக்கலாம். உலாவின் போது அவரை ஊரறிய பாடவைத்து கௌரவித்திருக்கின்றார். கோயினுள் ஒருக்கால் பாடினால் ஒரு சிலபேர்தான் கேட்டிருப்பார்கள். சித்திரை வீதியினுள் எவ்வளவு ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு மத்தியில் இவர் பாடியிருப்பார்.

பலர் மூலஸ்தானம் வரை வந்து தாங்களுக்கு ஏற்பட்ட சில இடை0யூறுகளுக்காக பெருமாளைக் கூட ஸேவிக்காமல் கோபம் மேலிட்டு கத்துவதைப் பாh;த்திருக்கின்றேன். அவர்கள் தான் வந்த காரியத்தின் பலனை, அரங்கனின் அந்த க்ஷண நேர ஸேவையினை இழந்ததற்காக, வருந்தியிருக்கின்றேன். எவ்வளவு இடையூறுகள் தாங்கள் ஸேவிக்க வரும்போது நேரிடினும் பொறுமையை மட்டும் கைவிடாதீர்கள். நம்பெருமாள் ஸேவையினைப் பெரிதாக நினையுங்கள். தொல்லைத் தருபவனற்றை தவிர்த்திடுங்கள் அல்லது பொருட்படுத்தாதீர்கள். பெரிய மஹான்களுக்கே இவையெல்லாம் நேரிடும் போது நாம் எம்மாத்திரம்!. கம்பர் இராமயணத்தினை இங்கு அரங்கேற்றம் செய்வதற்குள் அந்த கவிக்கு ஏற்பட்ட சோதனைகளை எழுதி மாளாது. அவரும் அரங்கன் மேல் நம்பிக்கை முழுதாக வைத்து தன் முயற்சியில் வெற்றி கண்டாh;.

ஸ்ரீரங்கத்தில் இம்மாதிரி பல கெடுபிடிகள் பண்டைகாலந்தொட்டே உண்டு.
இது இராஜதானி. இங்கு எவரும் லட்சியம் கிடையாது நம்பெருமாளைத் தவிர. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இதர திவ்யதேசங்களிலுள்ள மரியாதைகள் போன்று தனி மரியாதை எதுவும் கிடையாது. பிரஸாதங்களும் கூட பிரமாதமாக பிரஸித்தி கிடையாது. ஒன்றேயொன்றுதான் பிரதானம். அரங்கன் ஒருவர்தான் பிரதானம். அவன்தான் அனைவரையும் ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பவன்.

அவன் என்னையாளி அரங்கத்து – அரங்கில்
அவன் என்னையெய்தாமல் காப்பான் – அவன் என்னது
உள்ளது நின்றான் இருந்தான் கிடக்குமே,
வெள்ளத்தரவணையின் மேல்.

-மேலும் பேசுவோம்- Posted: 03-05-2008

Blog at WordPress.com.

%d bloggers like this: