Srirangapankajam

April 24, 2008

PESUM ARANGAN-6

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:32 pm

பெருமாளிடம் நாம் செலுத்தும் பக்தியானது நித்யமாகயிருக்க வேண்டும். தினமும் அவனது கல்யாண குணங்களை நினைக்கவோ அல்லது பேசவோ அல்லது தியானிக்கவோ வேண்டும். தினமும் துதிக்க வேணும். தாமிர பாத்ரத்தினைத் தினமும் புளியினால் தேய்த்தால்தான் அதற்கு பளபளப்பு. இல்லாவிடின் அதனுள்ளேயே மறைந்திருக்கும் களிம்பு பிடித்துக் கொஞ்ச நாள் ஆனவுடன் விஷத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடும்.
அது போன்று நம் இந்திரியங்களு்ம் விஷத் தன்மைக் கொண்டது. பக்தி ஒன்றே இக்களிம்பை நீககி நம்மை அவனிடத்தில் பற்றுக் கொள்ளச் செய்து நம்மை மிளிரச் செய்யும் உபாயமாகும். ஆணவமில்லாத பக்தியுள்ளவனிடம் பெருமாளும் மிகுந்த வாஞ்சையுடன் அருள்பாலிப்பார்.

பூந்தானம் நம்பூதிரி தினசரி விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் செய்வாராம். “பத்மநாபோ அமரப்ரபு:” என்று சொல்வதற்குப் பதில் “பத்மநாபோ மரப்ரபு:” என்று பாராயணம் செய்வாராம். ஒருநாள் நாராயண பட்டத்ரி இதனைத் திருத்தப்போக குருவாயூரப்பன் அவரைத் தடுத்து பூந்தானம் பாராயணம் செய்வதும் சரிதான். “சமஸ்த மரங்களுக்கும் நான்தானே ப்ரபு! எனவே அவர் வழக்கப்படியே செய்யட்டும். இதுவே எனக்கும் மகிழ்ச்சித் தரக்கூடியது” என்றருளினாராம். பூந்தானம் நம்பூதிரியின் பக்தியினால் அவரது தவறான உச்சரிப்பு கூட பகவானுக்கு மகிழ்வு தரக்கூடியதாயிற்று!

இஷ்வாகு அவரது சகோதரர்களுடன் ஸ்ரீரெங்கஸ்ரீயை மிக்க பக்தியுடன் ஆராததித்து வந்தான். பெரியபெருமாளும் மிகுந்த கிருயையுடனே இஷ்வாகுவிற்கும் அவனது வம்சத்தவர்களுக்கும் இவர்களது ஆராதத்தினால் மகிழ்வுற்று அவர்களை மிகவும் செழி்ப்புடனும் கீர்த்தியுடனுடன் வாழ்வில் மிளிரச் செய்தான். இவ்வாறே பற்பல சூரியகுல மன்னர்கள் ஆராதித்து தசரதன் அவரது அருந்தவ புதல்வரான ஸ்ரீராமரும் அன்புடனே ஆராதித்தனர். பெருமாளே, பெருமாளை ஆராதித்த ஒரே அர்ச்சை நம்பெருமாள்தான்! அயோத்தியில் சரயு நதிக்கரையில் ஸ்ரீரெங்கநாதர் நித்யபடி விமரிசையாக ஆராதனம் கண்டருளி பரம போக்யத்துடன் இருந்து வந்தார்

posted on 10th April’ 2008-

Blog at WordPress.com.

%d bloggers like this: