Srirangapankajam

February 26, 2011

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 34

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 9:11 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 34
26-11-2011

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

::பூத சுத்தி ::

“கந்த சக்த“யினை “ரேசக“த்தினாலே வெளியகற்றிய பின்பு
சமுத்திரம், நதிஈ ஓடை இவைப் போன்ற நீர்நிலைகள் எவைகள்
உள்ளனவோ, இவைகளைப் “பிறைச் சந்திரன்“ போன்ற உருவத்தினை
உடையதாயும், தாமரைக் கொடி உடையதாயும், நமது சரீரத்திற்கு வெளியே மனதினால தியானித்து பின்பு “பூரக“த்தினாலே மெதுவாக நம்முடைய தேகத்தினுள் நிரப்பவேண்டியது.

அடித்தொடைப் பாகம் முதல் முழங்கால் வரை அந்த ஜலத்தினால் வியாபிக்கப்பட்டதாய் “கும்பக“த்தினால் தியானிக்கவும்.

இதன் நடுவே வாருண மந்திரத்தினால் தியானிக்கவேண்டியது.
இம்மந்திரத்தினாலே ஜலமயமான அனைத்து பதார்த்தங்களும் லயமடைந்ததாக தியானிக்கவும்.

பிறகு ஜலமயமான அனைத்து விபவங்களையும், ரச சக்தியினாலேயும், அந்த ரச சக்தியினை அக்னியினாலேயும் “ரேசக“த்தினால் நுழைக்க வேண்டியது.

இங்கு அக்னியுடைய உருவத்தினை விவரிக்கின்றார் சாண்டில்யர்.

அக்னியானது திரிகோண வடிவம் – மின்னல், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், ரத்னங்கள், தாதுக்கள் மற்றும் ஒளி கொண்ட அனைத்து வஸ்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டது. மேலும் தானே பிரகாசிக்கக்கூடிய சரீரம் உடையவர்களும், சரீரமில்லாதவர்களுமான ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்களுடன், மங்கள ஸ்வரூபியான தேவதைகளுடன் கூடிய
இந்த அக்னியைத் தியானிக்கவேண்டியது.

பின்பு, அக்னி மந்திரத்தினைக் கூறி அந்த அக்னி மண்டலத்தினுள்
இருக்கக்கூடிய எம்பெருமானைத் தியானிக்கவும். இந்த அக்னி விபவத்தினை “பூரக“த்தினால் நாபியிலிருந்து அடித்தொடை வரை வியாபித்ததாய்
தியானிக்கவும்.

Advertisement

Theme: Silver is the New Black. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.